சென்னை கூட்டங்கள்


ஜூன் 2015 முதல் சென்னையில் வெண்முரசு வாசகர்கள் மாதமொருமுறை சந்தித்து வெண்முரசு குறித்து கலந்துரையாடுகின்றனர்.

2018

30.09.2018 அன்று நடந்த கூட்டத்தில் ராஜகோபாலன் சொல்வளர்காடு நாவல் குறித்து உரையாற்றினார்.

ஜூலை 29 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மாரிராஜ் ‘மாமலர்’ நாவல் குறித்து உரை நிகழ்த்தினார்.

ஜூன் மாத கூட்டத்தில் சொல்வளர்காடு குறித்து முத்துக்குமார் உரையாற்றினார்.

27.05.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தில் காண்டீபம் நாவல் குறித்து காளிபிரசாத் பேசினார்.

2017

ஆகஸ்ட் மாத கலந்துரையாடல் 27.08.2017 அன்று நடைபெற்றது.  இதில் மாரிராஜ் நீர்க்கோலம் நாவல் குறித்து பேசினார்.

30.07.2017 அன்று நடைபெற்ற கலந்துரையாடலில் சிறில் அலெக்ஸ், ராஜகோபாலன், காளிபிரசாத் ஆகியோர் பேசினர்.

25.06.2017 அன்று நடைபெற்ற ஜூன் மாத கூட்டத்தில் மாமலர் நாவல் குறித்து அருணாசலம் மகராஜனும் பானுமதியும் பேசினர்.

மே மாத கலந்துரையாடல் 14.05.2017 அன்று நடைபெற்றது.  இதில் காளிபிரசாத் இந்திரநீலம் குறித்து உரையாற்றினார்.

09.04.2017 அன்றைய கலந்துரையாடலில் வெண்முரசில் இணைமாந்தர்கள் குறித்து ராகவ் உரையாற்றினார்.

12.03.2017 அன்று நடந்த கூட்டத்தில் பானுமதி, ரகுராமன் மற்றும் மாரிராஜ் ஆகியோர் கிராதத்தில் அர்ஜுனனின் பயணம் குறித்து உரையாற்றினர்.

12.02.2017 அன்று நிகழ்ந்த கலந்துரையாடலில் பானுமதி கிராதத்தில் அர்ஜுனனின் தென் திசைப் பயணம் குறித்தும் அருணாசலம் அர்ஜுனன் வருணனை வென்று மீள்வதைப் பற்றியும் உரையாற்றினர்.

22.01.2016 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மஹாபாரதத்தை தமிழில் மொழிபெயர்த்து வரும் அருட்செல்வப் பேரரசனுடன் சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ந்தது.

2016

12.11.2016 அன்று நடைபெற்ற கலந்துரையாடலில் வண்ணக்கடல் நாவல் குறித்து கடலூர் சீனு உரையாற்றினார்.

அக்டோபர் மாத கூட்டத்தில் சொல்வளர்காடு நாவல் குறித்து அருணாசலம் உரையாற்றினார்.

11.09.2016 அன்று நடைபெற்ற கூட்டத்தில் ‘வெண்முரசின் வெகுமக்கள்‘ என்ற தலைப்பில் சுனீல் கிருஷ்ணனும் ‘சொல்வளர்காட்டுடின் கல்விநிலையங்கள்’ குறித்து அஜிதனும் பேசினர்.

21.08.2016 அன்று நடைபெற்ற கூட்டத்தில் சிவகுமார் ‘வெண்முரசில் சமண தரிசனம்’ என்ற தலைப்பிலும் வெங்கடரமணன் ‘வெண்முரசு உரையாடல்களின் சமகாலப் பொருத்தப்பாடு’ குறித்தும் உரையாற்றினர்.

17.07.2016 அன்று நடைபெற்ற கூட்டத்தில் ‘சுனந்தை முதல் கிருஷ்ணை வரை’ என்ற தலைப்பில் சுதாவும் தன் வாசிப்பு குறித்து மணிமாறனும் பேசினர்.  

ஜூன் மாத கூட்டம் 12.06.2016 அன்று நடைபெற்றது.  வெய்யோன் நாவல் குறித்து ராகவும் வெண்முரசு குறித்து வேணு தயாநிதியும் பேசினர்.

ஏப்ரல் மாத கூட்டம் 01.05.2016 அன்று நடைபெற்றது. ‘வெண்முரசில் காமமும் வஞ்சமும்’ என்ற தலைப்பில் ரகுராமனும் அர்ஜுனன் குறித்து தங்கமும் பேசினர்.  இக்கூட்டத்தில் ஜெயமோகன் பார்வையாளராக கலந்துகொண்டார்.

மார்ச் மாத கூட்டம் 13.03.2016 அன்று நடைபெற்றது.  ’முடிவிலியை நோக்கி’ என்ற தலைப்பில் ஜானகிராமன் பேசினார்.

பிப்ரவரி கூட்டம் – 21.02.2106 அன்று நடைபெற்ற கூட்டத்தில் வெண்முரசின் ஓவியங்கள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ந்தது.  ஓவியர் ஷண்முகவேல் தன் எண்ணங்களை பகிர்ந்துகொண்டார்.

ஜனவரி 2016 கூட்டம் 17.01.2016 அன்று நடைபெற்றது. மகராஜன் அருணாசலம் ’சிறியன சிந்தியாதான்’ என்ற தலைப்பில் வெண்முரசில் துரியோதனனின் சித்தரிப்பு குறித்து பேசினார்.

2015

29.11.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் நீலம் குறித்து அஜிதனும் இந்திரநீலம் பற்றி ஸ்ரீனிவாசனும் பேசினர்.

அக்டோபர் மாத கூட்டம் 11.10.2015 அன்று நடைபெற்றது. வெண்முரசில் குலநாயகர்கள் குறித்து காளிபிரசாத்தும் தொழும்பன் சாத்யகி குறித்து ராகவும் பேசினர்.

செப்டம்பர் மாத கூட்டம் 13.09.2015 அன்று நடைபெற்றது.  பிரயாகையில் துருவனைப் பற்றிய குறிப்புகளின் முக்கியத்துவம் குறித்தும் வெண்முரசில் வாழ்க்கைச் சிந்தனைகள் குறித்தும் கவிதா பேசினார்.

ஆகஸ்ட் மாத கூட்டம் 16-ஆம் தேதி அன்று நடைபெற்றது. ரவிக்குமார் ‘வெண்முரசில் விலங்குகள்’ குறித்தும், சுரேஷ்பாபு ‘வாரணவத நிகழ்ச்சியின் முக்கியத்துவம்’ குறித்தும் பேசினர்.

ஜூலை மாத கூட்டத்தில் ‘வெண்முரசில் கனவுகள்‘ குறித்து மகராஜன் அருணாசலமும் ‘வெண்முரசில் குருமார்கள்‘ குறித்து சௌந்தரும் பேசினர்.

ஜூன் மாத கூட்டத்தில் ‘வெண்முரசில் குலமரபும் கொடிவழிகளும்’ குறித்து காளிபிரசாத்தும், ‘வெண்முரசின் கிருஷ்ணன்‘ என்ற தலைப்பில் ரகுராமனும் பேசினர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: